economics

img

சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை

இந்தோனேஷியா அரசு சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதித்து வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது.

சமையல் எண்ணெய்க்கு,  உள்நாட்டில் உள்ள தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக அனைத்து சமையல் எண்ணெய் மூலப்பொருட்களின் ஏற்றுமதியை தடை செய்துள்ளது இந்தோனிஷேயா அரசு.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ அனைத்து சமையல் எண்ணெய் மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றுமதியை ஏப்ரல் 28 முதல் அடுத்த உத்தரவு வரை நிறுத்தி வைப்பதாக நேற்று அறிவித்தார்.  தென்கிழக்கு ஆசிய தேசத்தில் சமையல் எண்ணெய்களுக்கான கடுமையான தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் இந்த முடிவை இந்தோனேஷியா அரசு எடுத்துள்ளது.

பாமாயில் இறக்குமதியில் இந்தியா தனது 8.3 மில்லியன் டன் இந்தோனேசியாவிலிருந்து பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;